1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (07:02 IST)

மீண்டும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஜெய்ஸ்வால் முன்னேற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் நான்காவத் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த அவர் தன்னுடைய முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 979 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் சுனில் கவாஸ்கரின் முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 938 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசையின் படி மேலும் 3 இடங்கள் முன்னேறி 12 ஆவது இடத்துக்கு சென்றுள்ளார். இந்திய வீரர்களான கோலி 9 ஆவது இடத்திலும், ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முறையே 13 மற்றும் 14 ஆவது இடத்திலும் உள்ளனர்.