செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2024 (07:44 IST)

சாக்‌ஷிக்குப் பிறகு நான் மட்டுமே… தோனியைக் கலாய்த்த ஜடேஜா!

ஐபிஎல் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் இரண்டு போட்டிகளையும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. எனவே இந்த முறை அந்த அணி கோப்பை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ரசிகர்கள் கருத்து சொல்ல இப்போதே ஆரம்பித்து விட்டன.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு ஜடேஜா அளித்த பதில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதில் “சாக்‌ஷி அண்ணிக்குப் பிறகு தோனியால் தூக்கப்பட்ட ஒரே ஒரு ஆண் நபர் நானாகதான் இருப்பேன்” என ஜாலியாக பதிலளித்துள்ளார். இந்த பதிலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்து ரசித்துள்ளார்.

ஐபிஎல் கடந்த சீசனில்  இறுதிப் போட்டியில் கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து ஜடேஜா சி எஸ் கே அணியை ஐந்தாவது முறையாகக் கோப்பையை வெல்ல வைத்தார். அப்போது உணர்ச்சி பெருக்கில் தோனி ஜடேஜாவை தூக்கிக் கொண்டாடினார். அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்ற ஒரு புகைப்படமாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை குறிப்பிட்டுதான் ஜடேஜா இவ்வாறு கூறியுள்ளார்.