வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 29 நவம்பர் 2023 (07:30 IST)

இஷான் கிஷான் செய்த தவறால் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த ப்ரீஹிட்! அங்கு தொடங்குச்சு தோல்விப்பாதை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 போட்டி நேற்று கௌகாத்தியில் நடந்தது.  இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஜெய்ஸ்வால்  6 ரன்னுடன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கிஷான் டக் அவுட்டானார்.  ஆனால், ருதுராஜ் 57 பந்துகளில் 123 ரன்கள் அடித்து அசத்தினார். சூர்யகுமார் யாதவ் 39 ரன்னும், வர்மா 31 ரன்னும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் சேர்த்தது.


ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரில் 30 ரன்களை இந்திய வீரர்கள் சேர்த்தனர். இதையடுத்துக் களமிறங்கிய ஆஸி அணியும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வேல் கடைசி வரை களத்தில் நின்று 48 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து அந்த அணியை வெற்றி பெறவைத்தார்.

ஆஸி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அக்ஸர் படேல் வீசிய 19 ஆவது ஓவரில் மேத்யூ வேட்டை ஸ்டம்ப் இட் செய்தார் இஷான் கிஷான். மூன்றாம் நடுவரின் ரிப்ளையில் இஷான் கிஷான் பந்தை ஸ்டம்புக்கு முன்னர் சென்று பிடித்தது தெரியவந்தது. இதனால் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்ட ப்ரீஹிட் வழங்கப்பட்டது. அந்த ப்ரீஹிட் பந்தில் வேட் சிக்ஸ் அடித்து கலக்கினார். இந்திய அணியின் பிடி அந்த பந்தில் இருந்து தளர்ந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.