வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (12:44 IST)

தோனியுடன் சாதனை பட்டியலில் இணைந்த இஷான் கிஷான்

ishan kishan
தோனியுடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்  இளம் வீரர் இஷான் கிஷான்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் 114 ரன்னில் வெஸ்ட் இண்டீசை சுருட்டி, சூப்பர் வெற்றி பெற்ற இந்திய அணி,   2 வது ஒரு நாள் போட்டியில்  விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த  நிலையில் இரு அணிகள் 1 -1 என்ற சம நிலையில் உள்ள நிலையில் இன்று நடக்கும் 3 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 351 ரன்கள் அடித்தது, இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்னில் சுருண்டனது. எனவே 200 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 வது தொடரில் இசஷான் கிஷன் அரைசதம் அடித்ததன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்த 6வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர்,. ஸ்ரீகாந்த், திலீப் வெங்சர்ககார், அசாருதீன், எம்.எஸ்.தோனி( 2019), ஸ்ரேயாஸ் அய்யர்(2000 ஆகியோருக்கு அடுத்து இப்பட்டியலில் இஷான் கிஷன் இணைந்துள்ளார்.