வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 5 டிசம்பர் 2014 (14:15 IST)

சீனியர் வீரர்கள் கழற்றி விடப்பட்டதற்கு தோனி காரணமா?

உலகக் கோப்பை வீரர்கள் பட்டியல் தேர்வில் கேப்டன் தோனியின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டது என்று இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறியுள்ளார்.
 
வரும் 2015ஆம் அண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணியில் சீனியர் வீரர்களான சேவாக், கம்பிர், யுவராஜ் சிங், ஹர்பஜன் ஆகியோர் இடம்பெறவில்லை. இந்நிலையில், உலகக் கோப்பை வீரர்கள் பட்டியலில் தோனியின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டது என்று இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறியுள்ளார்.
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச அணியை அறிவித்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச கிரிக்கெட் அணி தேர்வில் சீனியர் வீரர்களின் பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. எல்லா வீரர்களின் பெயர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால் அணி தேர்வில் வீரர்களின் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
 

 
இளம் வீரர்கள் உள்ளூர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எனவே அவர்களது பெயரை தவிர்க்க முடியாது. கேப்டன் தோனியின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டது. உத்தேச அணியில் இடம் கிடைக்காததால் ஷேவாக், யுவராஜ் சிங் போன்றோரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதா? என்ற கேள்விக்கு நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
 

 
நிறைய இளம் வீரர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உலக கோப்பை போட்டிக்கு பிறகும் இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.