1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (13:26 IST)

சுனில் நரைனை அனுமதிக்காததால் ஷாருக்கானின் கொல்கத்தா அணி வெளியேறுகிறது?

சுனில் நரைன் அனுமதிக்காததால் ஐபிஎல் போட்டியிலிருந்து ஷாருக்கானின் கொல்கத்தா அணி வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வருகின்ற ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி 8ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கிறது. இதன் தொடக்கப் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
 

 
இந்நிலையில் கடந்த ஆண்டு (2014) நடந்த சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் இந்த ஐபிஎல்-இல் விளையாட அனுமதிக்க மாட்டார் எனத் தெரிகிறது.
 
ஆனால், சுனில் நரைன் இங்கிலாந்தில் உள்ள ஐ.சி.சியின் அங்கீகாரம் பெற்ற பந்து வீச்சு பரிசோதனை மையத்தில், பந்துவீச்சை சோதனைக்கு உள்ளாகி தனது பந்து வீச்சு விதிமுறைக்கு உட்பட்டுதான் இருக்கிறது என்பதை நிரூபித்தார். இருப்பினும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் சுனில் நரின் பந்து வீச அனுமதி அளிக்கப்படுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
இந்நிலையில், சுனில் நரின் பந்து வீச்சுக்கான தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்க வேண்டும் என்று நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியாவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஒருவேளை ஐபிஎல்-இல் சுனில் நரைன் விளையாட அனுமதி அளிக்கப்படாவிட்டால் ஐ.பி.எல். போட்டியில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விலகுவதற்கு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை.