1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (16:47 IST)

IPL 2024: கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்.. சிஎஸ்கே புது கேப்டன் இவர்தான்?! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

IPL 2024 Team captains
ஐபிஎல் 2024 சீசன் நாளை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் நாளை தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்நிலையில் ஒவ்வொரு அணிகளுக்குமான கேப்டன்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். சிஎஸ்கே அணிக்கு கடந்த 2008 முதலாகவே எம்.எஸ்.தோனி கேப்டனாக இருந்து வந்த நிலையில் இந்த சீசன் அவருக்கு கடைசி சீசன் என பேசிக் கொள்ளப்படுவதால் இதிலும் அவரே கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது,.



ஆனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது தெரியவந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து அணி கேப்டன்களும் ஐபிஎல் ட்ராபியுடன் எடுத்த போட்டோவிலும் ருதுராஜ் கெய்க்வாட்டே இடம் பெற்றுள்ளார்.

இத்தனை ஆண்டுகாலமாக தோனியின் கேப்பிட்டன்சிக்காக ஐபிஎல் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், புதிய கேப்டன் ருதுராஜுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K