1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 4 ஜூன் 2017 (20:30 IST)

பாகிஸ்தான் பந்துவீச்சை தும்சம் செய்த இந்திய வீரர்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது.


 

 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிறகு 319 ரன்கள் குவித்தது.
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் தவான் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். தவான் 65 பந்துகளில் 68 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அதன்பிறகு கேப்டன் கோலி ரோகித சர்மாவுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர்.
 
ரோகித சர்மா 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அதன்பின் கோலி, யுவராஜ் சிங் கூட்டணி பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து தும்சம் செய்தது. இருவரின் அதிரடி ஆட்டத்தில் இந்திய அணியின் ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது.
 
இதனிடையே மழை அவ்வப்போது குறுக்கிட்டு வந்ததால் ஆட்டத்தின் ஓவர் 48ஆக குறைக்கப்பட்டது. யுவராஜ் சிங் 32 பந்துகளின் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 48 ஓவர் முடிவில் 319 ரன்கள் குவித்தது. கேப்டன் கோலி 68 பந்துகளில் 81 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
 
இதையடுத்து 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. மழை குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்ற மனநிலையில் ரசிகர்கள் உள்ளனர்.