ஆசிய கோப்பை ; ஹாங்காங்கை வீழ்த்தி இந்திய அணி 2 வது வெற்றி !
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்தது.
இதில், கே.எல்.ராகுல் 36 ரன்களும், ரோஹித் சர்மா 21 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68(26) ரன்களும் அடித்தனர்..
3 ஆண்டு காலமாக எந்த போட்டியிலும் சோபிக்காமல் விமர்சனத்திற்கு உள்ளான விராட் கோலி, இன்று ஹாங்ஹாங் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து, ஹாங்காங் அணிக்கு 193 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து விளையாடிய ஹாங்காங் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பியதாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் விக்கெ இழந்ததாலும், 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தோற்றது. இந்திய அணி 40 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி வெற்றி பெற்று, தன் 2 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.