முத்தரப்பு இரண்டாவது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு

toss
Last Updated: வியாழன், 8 மார்ச் 2018 (18:52 IST)
நிதாஸ் டிராபி முத்தரப்பு இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா- வங்காளதேசம் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி முதல் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
 
இன்று இந்தியா- வங்காளதேசம் இடையேயான இரண்டாவது டி20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி வங்காளதேச அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
 
இந்திய அணி இறுதிப்போட்டியில் சிக்கலின்றி செல்ல இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

webdunia

இதில் மேலும் படிக்கவும் :