திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (22:02 IST)

இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 318 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.