1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (18:39 IST)

இந்தியாவுக்கு அடுத்த கேப்டன் தயார்; இனி கோலி எப்படி?

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையே நடைப்பெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய ரஹானே அசத்தலான வெற்றியை தேடி தந்தார். 


 
இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்திய அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசு தொகை காத்திருக்கிறது.
 
கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக கடைசி டெஸ்ட் தொடரில் பங்கேற்வில்லை. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ரஹானா கேப்டனாக களமிறங்கினார். இது அவர் கேப்டனாக பொறுபெற்ற முதல் போட்டி. இதனால் பல கிரிக்கெட் வர்ணனையாளர் வெற்றிப்பெற கடைசி போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இல்லாமல் சாதிக்குமா? என்ற கேள்வி எழுப்பினர். 
 
ரஹானே எதையும் பொருட்படுத்தாமல் அமைதியன முறையில் அசத்தாலாக செயல்பட்டார். கடைசி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களின் சுருண்டது. இதற்கு ரஹானே ஒரு முக்கிய காரணம். அருமையாக பவுலர்களை பயன்படுத்தி ஆஸ்திரேலிய வீரர்கள் நெருக்கடி கொடுத்தார்.
 
இதையடுத்து ஒரு கேப்டனாக பொறுப்புடன் பேட்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது. மிட் விக்கெட்டில் களமிறங்கி அதிரடி காடியது பெரும் சவாலான ஒன்று. சவாலான நிலையில் பொறுப்புடன், ரிஸ்க் எடுத்து ஆடினார். இவரது பொறுப்பான இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணியை வெற்றியடைய செய்தது.
 
இந்திய அணிக்கு விராட் கோலிக்கு அடுத்து ஒரு கேப்டன் உள்ளதை சரியான நேரத்தில் உணர்த்தியுள்ளார் ரஹானே. இதனால் கோலி சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். இனி வரும் போட்டிகளில் கோலி சற்று திணறினால். கேப்டன் பதவி ரஹானே செல்லும் வாய்ப்புள்ளது. 

மேலும் பிரபல கிரிகெட் வீரர்கள் மிட்செல் ஜான்சன் போன்றோர், ரஹானே இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.