வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 4 டிசம்பர் 2014 (17:12 IST)

11 ஆவது உலக கோப்பை கிரிக்கெட்: உத்தேச இந்திய அணி அறிவிப்பு

வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
11 ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டி தொடருக்கான உத்தேச இந்திய அணியை தேர்வு செய்ய சந்தீப் பட்டீல் தலைமையிலான குழு தேர்வாளர்கள் ஆலோசித்தனர்.

மேலும் இந்த உத்தேச அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் குறித்த விவரம், தோனி, தவான், ரோகித் சர்மா, ரகானே, உத்தப்பா, கோலி, ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜோதவ், மனோஜ் திவாரி, மனிஷ் பாண்டே, சகா, புவனேஷ்வர் குமார்சாஞ்சு சாம்சன், மோகித் சர்மா, ஆர்.அஸ்வின், பர்வீஸ் ரசூல், கரண் சர்மா, வருண் ஆரோன், அமித் மிஸ்ரா, ஜடேஜா, அக்சர் படேல், இஷாந் சர்மா,  முகமது சமி, உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, ஸ்டுவார்ட் பின்னி, அசோக் திண்டா, குல்தீப் யாதவ், மற்றும் முரளி விஜய் ஆகிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.