500-வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மோசம்!

500-வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மோசம்!


Caston| Last Modified வியாழன், 22 செப்டம்பர் 2016 (17:12 IST)
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கோலி தலைமையிலான இந்திய அணியுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

 
 
முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது. இது இந்திய அணி பங்கேற்கும் 500-வது டெஸ்ட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
மிகவும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விஜய் 65 ரன்கள், புஜாரா 62 ரன்கள் எடுத்தனர்.
 
நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் மற்றும் வாங்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


இதில் மேலும் படிக்கவும் :