திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 மார்ச் 2018 (11:59 IST)

பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணி: போட்டிக்கான இடம் மாற்றம்?

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானோடு கிரிக்கெட் விளையாடுவதில்லை. இதனால் சில ஆண்டுகளாக இரு அணிகளும் சுற்றப்பயணமும் மேற்கொள்ளவில்லை. 
 
இந்நிலையில் ஆசிய வளரும் நாடுகளுக்கான கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனல், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. 
 
இதனால் இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது. இதனால் போட்டி இலங்கை அல்லது வங்கதேசத்திற்கு இடம் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டியை நடத்த தயார் என அறிவித்த பின்னர், இந்தியா மறுப்பு தெரிவித்ததால் இந்த போட்டி எங்கு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான குழப்பத்தில் ஐசிசி உள்ளது.