1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (14:17 IST)

இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு இப்படி ஒரு டிமாண்ட்டா? ஒரு டிக்கெட்டின் விலை 1.8 கோடி ரூபாயா?

கடந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முதலாக இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இவ்வளவு அதிக அணிகள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.

இந்த தொடருக்கான ஏ பிரிவில் இந்தியா பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியுயார்க் மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டன. இப்போது இணையதளங்கள் மூலமாக மறுவிற்பனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆச்சர்யப்படத்தக்க வகையில் டிக்கெட்டின் விலை அதிகபட்சமாக 40 லட்சம் முதல் 1.86 கோடி ரூபாய் வரை விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில் இந்த அளவுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.