வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Dinesh
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (09:58 IST)

மழையால் இந்தியாவின் வெற்றி பறிபோனது

மழையால் இந்தியாவின் வெற்றி பறிபோனது

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டிராவில் முடிந்தது.


 


முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 196 ரன்களில் ஆல்-அவுட்டானது. அதை தொடர்ந்து ஆடிய, இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடிய போது, 4வது நாள் ஆட்டத்தில் மழை வந்து குறுக்கீடு செய்தது. அப்போது, மேற்கிந்திய தீவுகள் அணி 96 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி நாள் ஆட்டமும் மழையால் நிறுத்தப்பட்டு பிறகே தொடங்கப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் ‘டிரா’ செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தனர்.

மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்களைச் சேர்த்து, போட்டியை டிரா செய்தது. அபாரமாக ஆடிய ரோஸ்டன் சேஸ் 137 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து, ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். சொந்த மண்ணில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியில் இருந்து தப்பியது மேற்கிந்திய தீவுகள் அணி.