வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (19:25 IST)

இஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு; 132 ரன்கள் முன்னிலையில் இந்தியா

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சில் இலங்கை அணி 201 ரன்களுக்குள் சுருண்டது.
 

 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழுப்புவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
 
இதில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 312 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக புஜாரா 145 ரன்களும், அமித் மிஸ்ரா 59 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் தம்மிகா பிரசாத் 4 விக்கெட்டுகளையும், ரங்கணா ஹெராத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 

 
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் வீரர்களை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் திணறடித்தனர். இதனால் இலங்கை அணி 52.2 ஓவர்களுக்குள் 201 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
அந்த அணியில் அதிகப்பட்சமாக திரிமன்னே 55 ரன்களையும், ஹெராத் 49 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை 111 ரன்கள் முன்னிலை பெற்றதோடு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 1 ரன்னுடனும், ரோஹித் சர்மா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதுவரை இந்தியா 132 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.