Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியாவுக்கு எங்களுடன் விளையாட பயம்; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்


Abimukatheesh| Last Updated: வியாழன், 6 ஜூலை 2017 (19:43 IST)
இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாட பயப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகர்யார் கான் தெரிவித்துள்ளார்.

 

 
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துக்கொண்ட பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகர்யார் கான் கூறியதாவது:-
 
பாகிஸ்தான் வெற்றிப்பெற்ற பிறகு இங்கு வந்து எங்களுடன் இரு தரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவுக்கு சவால் விடுத்தோம். ஆனால் இந்திய அணி பயத்தில் விளையாட முன்வரவில்லை என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :