1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (21:43 IST)

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனம்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர்கள், டி-20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தை, விமர்சித்தத்திற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடுமையாக கண்டித்துள்ளது.


 

 
டி-20 உலகக் கோப்பைக்கு முன்பே, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர்கள், ஊதியம் மற்றும் ஒப்பந்த பிரச்சினை காரணமாக போட்டியில் இருந்து விலக முடிவு எடுத்ததாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 
 
மேலும், பல மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர்களின் மரியாதையற்ற கருத்துகள் விளையாட்டை இழிவுப்ப்டுத்தி உள்ளதாகவும், வீரர்கள் மீது நடத்தைக் குற்றச்சாட்டை முன்வைக்க உள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
 
இதைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் சஷாங் மனோகர், "கிரிக்கெட் விளையாட்டு ஒரு தனித்துவ திறமையின் பெருமை, போட்டிகள் வெற்றி தோல்வி இரண்டையும் உள்ளடக்கியது, எப்போதும் விளையாட்டுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், ஒருவரின் எதிரி விளம்பரங்களும், ரசிகர்களும் தான்” என்று கூறினார்.