செவ்வாய், 19 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2016 (16:23 IST)

ஒரு நாள் போட்டி அணிக்கு விராட் கோலி கேப்டன்: தோனிக்கு அணியில் இடமில்லை!

ஒரு நாள் போட்டி அணிக்கு விராட் கோலி கேப்டன்: தோனிக்கு அணியில் இடமில்லை!

ஒரு நாள் போட்டி அணிக்கு விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார், தோனிக்கு அணியில் இடமில்லை என்ற தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது வேற மாதிரியான ஒரு நாள் போட்டி அணி.


 
 
சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வருட இறுதியிலும் ஐசிசி கனவு அணி என டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி அணியை அறிவிக்கும். உலக அளவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களை ஐசிசி கனவு அணிக்கு தேர்வு செய்வார்கள்.
 
இந்த வருடத்தின் ஐசிசியின் கனவு டெஸ்ட் அணி விபரம்:-
 
1. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
2. அலய்ஸ்டர் குக் (இங்கிலாந்து) கேப்டன்
3. கனே வில்லியம்சன் (நியூசிலாந்து)
4. ஜோ ரூட் (இங்கிலாந்து)
5. ஆடம் வோஹ்ஸ் (ஆஸ்திரேலியா
6. பெர்ஸ்டோவ் (இங்கிலாந்து)
7. பென்ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
8. அஷ்வின் (இந்தியா),
9. ரெங்கனா ஹெராத் (இலங்கை)
10. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
11. டேல் ஸ்டைன் (தென் ஆப்பிரிக்கா)
12 வது வீரர் ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
 
இந்த வருடத்தின் ஐசிசியின் கனவு ஒரு நாள் போட்டி அணி விபரம்:-
 
1. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
2. குவெண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா)
3. ரோகித் சர்மா (இந்தியா
4. விராட் கோலி (இந்தியா) கேப்டன்,
5. டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
6. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)
7. மிட்செல் மார்ஸ் (ஆஸ்திரேலியா)
8. ரவீந்தர் ஜடேஜா (இந்தியா)
9. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
10. ரபாடா (தென் ஆப்பிரிக்கா)
11. சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்)
12 வது வீரர் இம்ரான் தாஹீர் (தென் ஆப்பிரிக்கா) 
 
சமீப காலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் ஐசிசி கனவு அணியில் அஸ்வின் பெயர் மட்டுமே இடம் பிடித்தது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. ஆனால் ஒரு நாள் போட்டி அணியில் இந்திய வீரர்கள் மூன்று பேர் இடம்பிடித்துள்ளனர்.