திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2023 (12:31 IST)

இனி ஐசிசி கோப்பைகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டுக்கு சமமான பரிசுத்தொகை…ஆண்டுக்கூட்டத்தில் முடிவு!

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஐசிசியின் ஆண்டுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி இனி ஐசிசி நடத்தும் கோப்பை தொடர்களில் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு சமமான பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே அறிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  மேலும் மற்றொரு முக்கிய முடிவாக இனிமேல் ஓவர்களை ஸ்லோவாக வீசும் அணிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறைந்த ஓவர் ரேட்டுக்கு 5 முதல் 50 சதவீதம் வரை போட்டிக் கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.