வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Bharathi
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2015 (13:47 IST)

பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டிபோடப்போவதில்லை : ராஜீவ் சுக்லா திட்டவட்டம்

பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டிபோடப்போவதில்லை என்று ஐ.பி.எல். கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



பிசிசிஐ தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியாவின் மறைவைத் தொடர்ந்து பிசிசிஐ தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக பிசிசிஐ சிறப்புக் குழு கூட்டம் அக்டோபர் 4ஆம் தேதி மும்பையில் கூடுகிறது.

இதில் புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.இந்நிலையில் பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் இதனை சுக்லா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தலைவர் பதவிக்கான தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. பி.சி.சி.ஐ அமைபின் உண்மையான விசுவாசி நான். வாரியத்தை திறம்பட செயல்பட வைப்பதற்காகவே நான் தொடர்ந்து செயலாற்றி வருகிறேன்".

தலைவர் பதவிக்கு போட்டியிடும் சாஷங் மனோகருக்குத் தான் எனது முழு ஆதரவு. அப்பதவிக்கு அவர் தகுதியானவர் என்பதால் தான் ஆதரவு தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.