Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியாவை கண்டால் பயமாக இருக்கிறது - 360 டிகிரி பேட்ஸ்மேன்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 16 மே 2017 (19:16 IST)
இந்தியா ஐபிஎல் போட்டி மூலம் வலுவடைந்து வருகிறது. நான் இந்திய கிரிக்கெட்டைப் பார்த்து பயப்படுகிறேன் என தென் ஆப்பரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியா ஐபிஎல் போட்டிகள் மூலம் மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது. மற்ற நாடுகளில் இது இல்லை. மற்ற நாடுகள் மெதுவாக முன்னேறி வருகின்றனர். ஆனால் இப்போது இந்தியாதான் கிரிக்கெட்டில் உச்சத்தில் இருப்பதாக நினைகிறேன்.
 
ஐபிஎல் போட்டி மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை, நெருக்கடிகளை, இளம் வீரர்கள் சவாலுடன் சந்தித்து அனுபவம் பெற்று வருகின்றனர். சிறந்த இளம் வீரர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இத்தகைய இளம் வீரர்கள் கையில் உள்ளது.
 
நடப்பு ஐபிஎல் சீசினில் பல இளம் வீரர்கள் ஆபாரமாக ஆடியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :