1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 22 டிசம்பர் 2014 (14:15 IST)

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கும் ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும்: சேப்பல்

காயம் காரணமாக கிளார்க் விலகியுள்ளதால் அவருக்கு மாறாக ஸ்மித் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ஏனைய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கும் அவரையே கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இயன்சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பேனில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. எனவே எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் ஸ்மித்தே கேப்டனாக செயல்படுகிறார்.
 
இது குறித்து சேப்பல் கூறுகையில், ஆட்டத்தில் ஸ்மித் அனுபவமிக்கவராக செயல்படுகிறார். மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளுக்கும் ஸ்மித்தை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து ஹாரிஸ் கூறும்போது, ஆஸ்திரேலிய அணியின் அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஸ்மித்தை கேப்டனாக நியமிக்கலாம் என்று கூறினார்.