வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (09:21 IST)

கேப்டனாக செயல்பட முடிந்தால் மகிழ்ச்சி! – நிரந்தர கேப்டனாக கொக்கி போடும் பாண்ட்யா!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை வென்ற ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் இறுதி போட்டி அமெரிக்காவில் லாடெர்ஹில்லில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 188 ரன்களை குவித்தது. தொடர்ந்து 189 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவர்களிலேயே 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் 4-1 என்ற விகிதத்தில் டி20 தொடரை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இந்த டி20 போட்டியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா இருந்தார்.

இதுகுறித்து பேசியுள்ள ஹர்திக் பாண்ட்யா “இந்திய அணியை வழிநடத்தியது சிறப்பான உணர்வை தருகிறது. எதிர்காலத்தில் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தற்போது ஆசிய கோப்பை போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு அணியை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.