தோனிய விட கேப்டன் கூல் ஒருத்தர் இருக்கார்… கவாஸ்கர் புகழ்ந்த இந்திய கேப்டன்!
தோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த காலம் இப்போது வரை பொற்காலமாக கருதப்படுகிறது. அவர் தலைமையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றது.
ஆனால் அதற்கு பிறகு 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் இன்றளவும் வெல்லவில்லை. தோனியின் கேப்டன்சி பண்புகளுக்காகவும், களத்தில் எளிதில் உணர்ச்சிவசப் படாமல் இருப்பதற்காகவும் அவரை கேப்டன் கூல் என ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்போது பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தோனியை விட கபில்தேவ்தான் ஒரிஜினல் கேப்டன் கூல் எனப் பேசியுள்ளார். 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் கபில்தேவ்வின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசிய அவர் அணிக்குள் புன்னகையை பரவச் செய்தார் கபில்” எனக் கூறி புகழ்ந்துள்ளார்.