வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2024 (16:37 IST)

பயிற்சியாளராக கம்பீரின் தொடக்கம் இப்படியா அமையணும்?.. அடுத்தடுத்து சந்தித்த தோல்விகள்!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிரடி காட்டிய நியூசிலாந்து அணி இந்தியாவை வென்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்த நிலையில் அதை வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும் இந்திய அணி கோட்டை விட்டு முதல் முறையாக நியுசிலாந்து அணியிடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு புதிதாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கம்பீரின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. கம்பீர் இந்திய அணிக்கு பொறுப்பேற்றதில் இருந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கிலும், நியுசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கிலும் தோற்று சொதப்பியுள்ளது.

இந்திய அணிக்கு கம்பீர் புதிய மீட்பராக இருப்பார் என்ற எதிர்பார்ப்புகளோடு அவர் இந்திய அணிக்குள் வந்தார். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை இதுவரை அவர் பூர்த்தி செய்யவில்லை என்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.