1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (15:09 IST)

கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆண்டுகளை கடந்து ரெய்னா அபாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரெய்னா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆண்டுகளை கடந்து அசத்தியுள்ளார். 
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள ரெய்னா உத்திரபிரதேச மன்னின் சொந்தக்காரர் ஆவார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். தற்போது ரெய்னா தனது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 10 ஆண்டுகளை கடந்து அசத்தியுள்ளார்.
 
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா தோனியுடன் சேர்ந்து பல அறிய வெற்றிகளை பதிவு செய்துள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சிக்சர் மழைகளை ரசிகர்களுக்கு பொழிந்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. 
 
மேலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடிக்கு பெயர் போன ரெய்னா டெஸ்ட் போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த முடியவில்லை. இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பல இக்கட்டான சூழலில் இந்திய அணிக்காக விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
 
இதுவரை 218 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள ரெய்னா 5,500 ரன்களை சேகரித்துள்ளார். இவற்றில் 5 சதம், 35 அரை சதம் ஆகியவையும் அடங்கும். அனைத்து ரக கிரிக்கெட் ஆட்டங்களான டெஸ்ட், ஒரு நாள் மற்றும், டி20 கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா என்பது கூடுதல் சிறப்பு.