அணியில் நீடிக்க அதிகாரிகளுடன் பெண் வீரர்கள் பாலியல் தொடர்பு - அமைச்சர் எச்சரிக்கை


லெனின் அகத்தியநாடன்| Last Modified ஞாயிறு, 24 மே 2015 (11:47 IST)
கிரிக்கெட் வீராங்கனைகள், அணியில் நீடிக்க அதிகாரிகளுடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்ததாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2014ஆம் ஆண்டு, அக்டோபர் மாத இறுதியில், பெயர் வெளியிடப்படாத இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர், அணியில் தொடர்ந்து நீடிக்க அதிகாரிகள் பாலியல் ரீதியில் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக புகார் அளித்தார்.
 
 
இதைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகள் அணியில் இருக்க வேண்டும் என்றால், அதிகாரிகளுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ள வலியுறுத்தப்படுவதாக வந்த புகார் எழுந்தது.
 
இந்நிலையில், இது குறித்து கடந்த வெள்ளிக் கிழமை பேசிய இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர், “இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீராங்கனைகள், கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான சாட்சிகள் கிடைத்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :