வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 நவம்பர் 2022 (20:06 IST)

இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் மோதுவதை அனைவரும் விரும்புவர்- பிரபல வீரர்

india won
இறுதிப் போட்டியில் இந்தியா –பாகிஸ்தான் மோதுவதை அனைவரும் விரும்புவர் என்று ஆஸ்திரேலிய  வீரர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரையிறுதி போட்டிக்கு, இந்தியா, பாகிஸ்தான் , இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 நாடுகள் தகுதி பெற்றுள்ளது.  இதில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

 இதனை அடுத்து நவம்பர் 10ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. அரையிறுதி சுற்றில் இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் வெற்றி பெற்றால் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் இறுதி போட்டியில் மோதும் நிலை ஏற்படும் உருவாகும்/

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா வெளியேறி விட்ட நிலையில் இந்தியா பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்  ஷேன் வாட்சன் கூறியுள்ளதாவது:

வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுவதை அனைத்து ரசிகர்களும் விரும்புவார்கள் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj