1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 8 செப்டம்பர் 2014 (10:54 IST)

பரபரப்பான 20 ஓவர் போட்டி: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே பர்மிங்காமில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
 
இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரில் இந்தியா 3 - 1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.  பின், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி  3 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்திப் பதிலடி கொடுத்தது. 
 
இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து  இடையேயான 20 ஓவர் போட்டி 7 செப்டம்பர், 2014 ( நேற்று )  பர்மிங்காமில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இங்கிலாந்து அணி, தனது இன்னிங்சைத் தொடங்கியது. தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
 
இங்கிலாந்து கேப்டன் மோர்க்கன், அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
 
கடினமான இலக்கை நோக்கி ஆட வேண்டிய கட்டாயத்தில், இந்திய அணி தள்ளப்பட்டது. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரஹானே, அலியின் பந்தில் போல்ட் ஆனார். பின் வந்த கோலி இம்முறை ஏமாற்றாமல் அரை சதம் கடந்தார். அவர் 66 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஷிகார் தவான் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
பின் வந்த வீரர்கள் வரிசையாக நடையைக் கட்ட, தோனி மட்டும் சற்றுப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால், இந்திய அணி, கடைசி வரை போராடியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால்,  3 ரன்களில் தோல்வியைச் சந்தித்தது. ஆட்ட நாயகன் விருதை மோர்க்கன் பெற்றார்.