வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 4 நவம்பர் 2023 (07:27 IST)

இந்தியாவின் காற்று மாசுபாட்டால் வீரர்கள் இன்ஹேலர் பயன்படுத்துகின்றனர்… இங்கிலாந்து ஊடகம் செய்தி!

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது.

எப்படியும் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமில்லாததாக ஆகிவிட்டது. இந்நிலையில் இங்கிலாந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து செய்தி தாளான “I” வெளியிட்டுள்ள செய்தியின் படி இங்கிலாந்து வீரர்கள் இந்திய நகரங்களின் காற்று மாசுபாடு காரணமாக மூச்சுத்திணறலுக்காக ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தும் இன்ஹேலர்களை பயன்படுத்துவதாக செய்தி வெளியிட்டுள்ளது.