ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து: 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து
siva| Last Updated: திங்கள், 14 செப்டம்பர் 2020 (10:45 IST)
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி நடைபெற்றது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. அதன்பின் 232 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தததை அடுத்து இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த வெற்றியை அடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கான அடுத்த போட்டி செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என்பதும் அந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணி என்பதும் குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்

இங்கிலாந்து: 231/9 50 ஓவர்கள்

மோர்கன்: 42
ரூட்: 39
கர்ரன்: 37

ஆஸ்திரேலியா: 207/10
48.4 ஓவர்கள்

பின்ச்: 73
லாபுசாஞ்சே: 48
கேரே: 39
ஆட்டநாயகன்: ஆர்ச்சர்இதில் மேலும் படிக்கவும் :