1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 நவம்பர் 2020 (08:15 IST)

இன்னும் சில் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெறும் – ராகுல் டிராவிட் கணிப்பு!

ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என தான் நம்புவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் கொரோனாவால் தள்ளிப்போனாலும் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. பல நூறு கோடி மக்கள் தொலைக்காட்சிமற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் போட்டிகளைப் பார்த்தனர். இந்நிலையில், அடுத்த வருடம் ஒரு புதிய ஐபிஎல் டீம் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த ஐபிஎல் அணியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் வாங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 8 அணிகள் உள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 9 அணிகள் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த அணி குஜராத்தை மையமாக வைத்து பெயர் சூட்டப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் 10 அணிகள் விளையாடக் கூடும் எனவும் பேச்சுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இதுகுறித்து ‘திறமை அடிப்படையில் ஐபிஎல் அணிகள் அதிகரிக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் இன்னும் திறமையான வீரர்கள் பலர் விளையாட வாய்ப்புக் கிடைக்காமல் உள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளனர்.