1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (17:26 IST)

டான் பிராட்மேனுடன் என்னை ஒப்பிடக்கூடாது - சங்கக்காரா

நான் எதிர்கொண்டதில் ஜாகீர்கான், கிரீம் ஸ்வான் பந்துவீச்சை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருந்தது என்று இலங்கை வீரர் சங்கக்காரா கூறியுள்ளார்.
 

 
நடந்து முடிந்த காலே டெஸ்ட் போட்டியுடன் இலங்கை கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்றார். பிறகு நிருபர்களிடத்தில் பேசிய சங்ககரா, “எனக்கு அஸ்வின் இந்த தொடரில் சவாலாக இருந்தார். ஆனால் மற்றபடி, எனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர் கான், மற்றும் கிரீம் ஸ்வான் ஆகியோர் சவாலாக இருந்துள்ளனர்.
 
நான் விளையாடிய பொழுது பல நேரங்களில், இவர்களது பந்துவீச்சில் எதிர்கொள்ள சிரமப்பட்டிருக்கிறேன். ஆனாலும், இந்த கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு முயற்சி செய்துள்ளேன்.
 
நான் விளையாடிய காலத்தியவர்களில் வாசிம் அக்ரம் சிறப்பான ஒருவர். அவரது பந்துவீச்சு காலத்தில் நான் இளம் வீரராக இருந்தேன். ஒருமுறை அவரது பந்து வீச்சில் அவுட் ஆக்கியுள்ளார். அவரது பந்துவீச்சும் ஸ்டைல் அற்புதமாக இருக்கும்” என்றார்.
 
134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சங்ககரா 12ஆயிரத்து 400 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி, 57.4 ஆகும். இதனால், அவரது இளம்வயது பயிற்சியாளர் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு பேசினார்.
 
இது குறித்து பேசிய சங்ககரா, “அவர் ஒருவேளை நகைச்சுவைக்காக சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில், பிராட்மேன் பேட்டிங்கை நான் வீடியோவில் பார்த்து இருக்கிறேன். அவர் ஒரு அபூர்வமான வீரர். எந்தவொரு கிரிக்கெட் சகாப்தத்திலும், டான் பிராட்மேனுடன் யாரையும் ஒப்பிட இயலாது.
 
புதிய நுணுக்கங்களையும், புதிய பயிற்சி உத்திகளையும் கொண்டு வந்தவர் அவர். குமார் சங்ககராவாக இருப்பது எனக்கு மிகவும் பாதுக்காப்பாக இருக்கிறேன். விளையாட்டில் என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் முக்கியம்” என்றார்.