ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 மே 2024 (13:09 IST)

கே.எல்.ராகுலை திட்டி செங்கோட்டையில கொடி ஏத்திட்டீங்களா? – LSG உரிமையாளரை கிழித்தெடுத்த முகமது ஷமி!

ஐபிஎல் போட்டியில் சமீபத்தில் லக்னோ அணி தோல்வி அடைந்ததால் அதன் உரிமையாளர், அணி கேப்டன் கே.எல்.ராகுலை திட்டிய சம்பவம் குறித்து இந்திய அணி பந்துவீச்சாளர் முகமது ஷமி கண்டனம் தெரிவித்துள்ளார்.



ஐபிஎல் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ப்ளே ஆப் தகுதி பெறுவதற்காக அனைத்து அணிகளும் போராடி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது.

இதனால் கோபமடைந்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் வைத்து நேரடி ஒளிபரப்பிலேயே அணி கேப்டன் கே.எல்.ராகுலை கடுமையாக திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பலரும் சஞ்சீவ் கோயங்காவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் காயத்தால் ஓய்வில் உள்ள இந்திய அணி பந்துவீச்சாளர் முகமது ஷமி லக்னோ அணி உரிமையாளரின் செயலை கண்டித்து பேசியுள்ளார். அதில் அவர் “கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு என்று ஒரு மரியாதை உண்டு. அணி உரிமையாளராக நீங்களும் மரியாதைக்குரிய நபர்தான். பலரும் உங்களை பார்த்து கற்றுக் கொள்வார்கள். இதுபோன்ற விவாதங்களை ஹோட்டலில் அல்லது ட்ரெஸிங் ரூமில் செய்திருந்தாலாவது பரவாயில்லை. மைதானத்தில் கோடிக்கணக்கான மக்கள் முன்னால் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்வதன் அவசியம் என்ன? இப்படி நடந்து கொண்டதால் என்ன சாதித்தார்? இதனால் ஒன்றும் அவர் செங்கோட்டையில் கோடி ஏற்றிவிடவில்லை” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K