1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 5 மே 2017 (12:51 IST)

7 ஏக்கரில் தோனியின் பிரம்மாண்ட பங்களா: என்னென்ன வசதிகள் தெரியுமா?

7 ஏக்கரில் தோனியின் பிரம்மாண்ட பங்களா: என்னென்ன வசதிகள் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி நவீன வசதிகள் கொண்ட புதிய பங்களா ஒன்றை 7 ஏக்கர் பரப்பளவில் வாங்கியுள்ளார்.


 
 
நடுத்தர குடும்பத்தில் பிறந்த தோனி ராஞ்சியில் தொரந்தா பகுதியில் ஒரு சாதாரணமான வீட்டில் வசித்து வந்தார். பின்னாளில் பிரபலமான கிரிக்கெட் வீரராக தோனி உருவெடுத்த பின்னர், மூன்று மாடிகள் கொண்ட வீட்டில் குடிபெயர்ந்தார்.
 
தனது மனைவி சாக்‌ஷி, மகள், அப்பா, அம்மாவுடன் வசித்து வந்த தோனி தற்போது ராஞ்சி ரிங் ரோடு பகுதியில் கைலாஷ்பதி என்ற புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். இந்த புதிய பங்களா ஏழு ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
 
7 ஏக்கரில் ஒரு பங்களாவா, இவ்வளவு பெரிய பங்களாவில் அப்படி என்ன இருக்கிறது பலரும் மலைத்துப்போய் பார்த்தனர். தோனியின் இந்த 7 ஏக்கர் பங்களாவில், உள்ளரங்க மைதானம், வலைப்பயிற்சி செய்யும் இடம், நீச்சல் குளம், நவீனமயமான உடற்பயிற்சி மையம் என பல்வேறு நவீன வசதிகள் இங்கு உள்ளது.
 
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தோனியின் குடும்பம் இந்த புதிய பங்களாவுக்கு குடிபெயர்ந்தது. தோனி ஐபில் போட்டியில் விளையாடி வருவதால் கிரஹப்பிரவேசத்தில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் சில மணி நேரங்கள் தனது குடும்பத்துடன் செலவிட்ட தோனி மீண்டும் புனே அணியுடன் இணைந்துகொண்டார்.