ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2017 (15:58 IST)

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல் : கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஆகிய போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து தான் விலகுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  தோனி அறிவித்துள்ளார்.


 


இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தர் மகேந்திர சிங் தோனி. இவர் 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து திடீரெனெ விலகினார். அதன் பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக பதவி வகித்து வந்தார்.
 
சமீபகாலமாக அவர் சிறப்பாக விளையாடுவதை பார்க்க முடியவில்லை. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கில்லாடியாக திகழ்ந்த அவர், கடந்த சில ஆட்டங்களில் சரியாக விளையாட வில்லை. மறுபக்கம், டெஸ்ட் போட்டிகளுக்கான விராட் கோலியின் எழுச்சி அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. 
 
விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து, நம்பர் ஒன் இடத்தையும் பெற்றது. எனவே விராட் கோலியிடமே ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியையும் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
 
இதனால் தீவிர ஆலோசனையில் இருந்த தோனி, தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக,  நேற்று மாலை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தார்.  அவரின் முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும், ஒரு வீரராக அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.