உன் அப்பாவ தோக்கடிச்சிட்டேன்னு கோவமா? – நடராஜன் மகளை கொஞ்சிய தோனி!
நேற்று ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகள் மோதிக் கொண்ட நிலையில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் நடராஜனின் மகளை தோனி கொஞ்சிய வீடியோ வைரலாகியுள்ளது.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 138 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
வெற்றியிலும், தோல்வியிலும் ஒரே போன்று செயல்படுவர் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி. ஒவ்வொரு மேட்ச்சிலும் சிஎஸ்கே தோற்றாலும் கூட எதிரணி வீரர்களுடன் நட்புடன் பேசி பழகுபவர். அதனாலேயே அனைத்து அணிகளிலும் தோனி என்றால் ஒரு பெரிய மரியாதை உள்ளது.
நேற்றைய போட்டிக்கு பின் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய தமிழ்நாட்டு வீரர் நடராஜன் தனது மகளுடன் தோனியை சந்தித்தார். நடராஜனின் மகளை கண்டதும் குழந்தை உள்ளமாக மாறி போன தோனி “மாமாவுக்கு ஹைஃபை குடு.. லோஃபை குடு” என நடராஜனின் மகளை கொஞ்சினார். பின்னர் நடராஜன் குடும்பத்தினர் தோனியுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.
அதுபோல நேற்று மேட்ச் முடிந்ததும் ஹைதராபார்த் அணி வீரர்கள் அனைவரும் தோனியை சந்தித்தபோது அவர்கள் அணியின் பலவீனம் என்ன? எப்படி விளையாட வேண்டும்? என தோனி ஆலோசனைகளை வழங்கினார். அதை சன்ரைசர்ஸ் அணியினர் குருவிடம் பாடம் கேட்பது போல கவனமாக கேட்டு நின்றுக் கொண்டிருந்தனர். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K