திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:41 IST)

சிங்கம் களமிறங்கிறுச்சு... சென்னை மண்ணுக்கு வந்தார் தல தோனி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னைக்கு வந்தடைந்தார்.
 
தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இனி விளையாடுவது உறுதியாக தெரியாத நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஐபிஎல் தொடர். செப்டம்பர் மாதம் அமீரகத்தில் நடக்க இருக்கும் தொடரை மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். 
 
இந்நிலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சென்னை அணி வீரர்கள் அமீரகம் செல்ல இருக்கின்றன. இதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னைக்கு வந்து 5 நாட்களுக்கு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். எனவே நேற்று கொரோனா சோதனை செய்துக்கொண்ட பின் சென்னை புறப்பட்ட தோனி இன்று சென்னை வந்தடைந்தார். 
 
சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா, தீபக் சாஹல், பியூஷ் சாவ்லா மற்றும் மோனு குமார் ஆகியோரும் சென்னை வந்த நிலையில் ஒரு வாரத்திற்கு இங்கு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.