திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (07:43 IST)

“தோனியும் டீசல் எஞ்சினும் ஒன்னுதான்… நிக்காம ஓடிகிட்டே இருக்கும்” – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் 2024 சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் சி எஸ் கே 10 அணிகளும் தயாராகி வருகின்றனர். பெரும்பாலான வீரர்கள் தங்கள் அணிகளோடு இணைந்து பயிற்சியை தொடங்கி விட்டனர். சி எஸ் கே அணியைப் பொறுத்தவரை கேப்டன் தோனி கடந்த மாத இறுதியிலேயே சென்னை வந்து பயிற்சியை தொடங்கிவிட்டார்.

தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனின் வயதான கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் தோனியை டீசல் எஞ்சினோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். அதில் “தோனி டீசல் எஞ்சினைப் போன்ற ஒருவர். டீசல் எஞ்சின் எப்படி நிக்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறதோ அது போல அவரும் தொடர்ந்து இயங்குகிறார். என்ன ஒரு அற்புதமான வீரர் & கேப்டன். சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சக்தியே தோனி போன்ற சீனியர் வீரர்கள்தான்.” எனக் கூறியுள்ளார். தோனி தன் தலைமையில் 5 முறை ஐபிஎல் கோப்பையை சி எஸ் கே அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.