வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (09:05 IST)

இன்று டெல்லி கேப்பிட்டல், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்! – தொடங்குகிறது WPL T20!

MI vs DC
கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வரும் பெண்கள் ப்ரீமியர் லீக் போட்டிகள் இந்த ஆண்டும் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.



ஐபிஎல்லின் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு முதலாகவே நடந்து வரும் நிலையில் அதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் WPL (Women Premiere League) போட்டிகளை கடந்த இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு நடந்த முதல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று முதல் இந்த ஆண்டிற்கான இரண்டாவது சீசன் டபிள்யூ.பி.எல் போட்டிகள் தொடங்குகின்றன. 20 லீக் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதி, இறுதிப் போட்டிகள் கொண்ட இந்த தொடர் இன்று தொடங்கி மார்ச் 17 வரை நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன.


இன்றைய போட்டியில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த சீசனில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி 10 போட்டிகளில் 8 வெற்றி 2 தோல்விகளை பெற்றது. டெல்லி அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி 3 தோல்விகளை பெற்றது.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்ட இந்த இரு அணிகளும் தற்போது தொடக்க ஆட்டத்திலேயே மோதிக்கொள்ள இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

Edit by Prasanth.K