1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 17 மே 2016 (17:06 IST)

டி வில்லியர்ஸ் மேலும் ஒரு சாதனை; பிராவோ, மில்லர் சாதனை சமன்

நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் டி வில்லியர்ஸ், ஒரு சீசனில் அதிக கேட்சுகள் பிடித்தவர்களில் வெய்ன் பிராவோ, டேவிட் மில்லர் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
 

 
நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக 34 பந்துகளில் 51 ரன்களும், மணீஷ் பாண்டே 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தனர்.
 
பின்னர் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 1 இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து விராட் கோலி 51 பந்துகளில் 75 ரன்களும், டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டினர்.
 
இதற்கிடையில், இந்த போட்டியின் போது கொல்கத்தா வீரர் மனிஷ் பாண்டே கொடுத்த கேட்ச்சை டிவில்லியர்ஸ் பிடித்தார். நடப்பு தொடரில் டிவில்லியர்சின் 14ஆவது கேட்ச் இதுவாகும்.
 
இதன் மூலம் ஒரு சீசனில் அதிக கேட்சுகள் பிடித்தவர்களில் வெய்ன் பிராவோ, டேவிட் மில்லர் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
 
முன்னதாக, 2013ஆம் ஆண்டில் வெய்ன் பிராவோ 14 கேட்ச்களும் (சென்னை அணிக்காக), 2014-ம்ஆண்டில் டேவிட் மில்லர் 14 கேட்ச்களும் (பஞ்சாப் அணிக்காக) பிடித்ததே சாதனையாக இருந்தது. எஞ்சியிருக்கும் போட்டிகளில் மேலும் ஒரு கேட்ச் பிடிக்கும்பட்சத்தில் ஒரு சீசனில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனையை எட்டுவார் என எதிர்பார்க்கலாம்.