1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (14:40 IST)

ஓய்வில் இருந்து திரும்புகிறாரா டேவிட் வார்னர்? ஆஸ்திரேலிய அணிக்கு விளையாட விருப்பம்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரோடு சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பையில் ஆஸி அணியால் சூப்பர் 8 சுற்றை தாண்ட முடியவில்லை. வார்னரின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாட தான் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக பேசியுள்ள அவர் “சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸி அணிக்காக நான் தேர்வுசெய்யப்பட்டால் விளையாட தயாராக இருக்கிறேன். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து பிரான்ச்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடுவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.