திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (20:34 IST)

பிரதமர் மோடியை சந்தித்த கிரிக்கெட் வீரர் ஜடேஜா

modi- jadeja
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரவீந்திர ஜடேஜா பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மற்றும் ஐபிஎல் அணியின் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர்  ரவீந்திர ஜடேஜா.

இவர் தன் மனைவியும் குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏவுமான ரிவபா ஜடேஜாவுடன் சென்று பாரத பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு பற்றி அவர் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியாகவுள்ளது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்,  எல்லோரையும் நீங்கள் ஊக்கப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஜடேஜா பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படம் பரவலாகி வருகிறது.