1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (23:28 IST)

திருமணம் குறித்து விளக்கம் கொடுத்த கிரிக்கெட் வீரர்

பிரபல கிரிக்கெட் வீரர் தனது திருமணம் குறித்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில்  ,  இதுவரை உலகக் கோப்பை வெல்லாத ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திரவீரர் ரஷித் கான் தன் நாட்டிற்காக உலகக் கோப்பை வெற்றி பெற்றாதால் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்துக் கூறிய ரஷித் கான், அடுத்த சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட உள்ளேன். உலககோப்பை வெல்வது குறித்தே கவனம் செலுத்தி வருகிறேன். இப்போது திருமணம் குறித்து நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.