வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 13 செப்டம்பர் 2014 (11:08 IST)

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் - லாகூர் லயன்ஸ் பலப்பரிட்சை

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ராய்ப்பூரில் தொடங்குகிறது. இதில் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் – சதர்ன் எக்ஸ்பிரஸ், மும்பை இந்தியன்ஸ் – லாகூர் லயன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வருகிற செப் 17 முதல் அக் 4 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளது. பிரதான சுற்றில் விளையாட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இதில் எஞ்சிய 2 அணிகள் தகுதிச் சுற்று ஆட்டம் மூலம் தேர்வு செய்யப்படும்.

இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் தகுதிச் சுற்று முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தின் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ், இலங்கையின் சதர்ன் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியும், இரவு 8 மணிக்கு நடைபெறும் 2 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியாவின் மும்பை இந்தியன்ஸ், பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணியும் மோதுகின்றன.

ரோகித்ஷர்மா காயம் காரணமாக சாம்பியன்ஸ் லீக் போட்டிகளிலிருந்து விலகியதால், அணியின் புதிய கேப்டன் பொல்லார்ட் திறம்பட செயல்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.