வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2015 (14:09 IST)

டெஸ்ட் போட்டியிலும் நம்பர் 1 இடத்தை கைப்பற்றுவோம்: கிளார்க்

தற்போது ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது போல டெஸ்ட் போட்டியிலும் டாப் இடத்தை கைப்பற்றுவோம் என ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

 

 
11 ஆவது உலகக் கோப்பை மகுடத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் டாப் இடத்தை பிடித்துவிட்டது. இந்நிலையில் இதே முனைப்புடன் டெஸ்ட் போட்டியிலும் அசத்தி டாப் இடத்தை வெல்ல கிளார்க் திட்டமிட்டுள்ளார். 
 
இதுகுறித்து கிளார்க் கூறுகையில், வரும் நாட்களில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளோம். இத்தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு டெஸ்டிலும் நம்பர் 1 இடத்தை பிடிப்போம் என்றார். டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.