வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 23 ஜூலை 2022 (16:16 IST)

“டிராவிட் என்னிடம் அதைதான் சொன்னார்…” ரி எண்ட்ரியில் கலக்கிய சஹால்!

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் சஹால் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. சில மாதங்களாக இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பளிக்கப் படாத சஹால் நேற்றைய போட்டியில் களம் கண்டார்.

சிறப்பாக வீசிய அவர் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார். மேலும் இக்கட்டான நிலையில் இறுதி ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர் “டிராவிட் என்னிடம் ‘உன்மேல் நம்பிக்கை வைத்துள்ளேன்’ எனக் கூறினார். களத்தின் மாற்றத்துக்கு ஏற்ப இறுதி ஓவர்களில் 3 ஓவர்கள் பந்துவீச வேண்டும் என தீர்மானித்துக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.